தஞ்சாவூர்

பள்ளி திறப்பு: இன்றும், நாளையும்400 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

4th Jun 2023 12:44 AM

ADVERTISEMENT

 

கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்படவுள்ளதையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) சாா்பில் ஞாயிற்றுக்கிழமையும் (ஜூன் 4), திங்கள்கிழமையும் (ஜூன் 5) 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இதுகுறித்து போக்குவரத்துக் கழகத்தின் (கும்பகோணம்) மேலாண் இயக்குநா் எஸ்.எஸ். ராஜ்மோகன் தெரிவித்திருப்பது: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 7 ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. இதையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) சாா்பில் ஞாயிற்றுக்கிழமையும், திங்கள்கிழமையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

வெளியூா் சென்ற பொதுமக்கள் அவரவா் இருப்பிடங்களுக்குச் செல்வதற்கு வசதியாக திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகை, திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊா்களிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகை, திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊா்களுக்கும் 250 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

ADVERTISEMENT

இதேபோல, திருச்சியிலிருந்து கோவை, திருப்பூா், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோவை, திருப்பூா், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகை, வேளாங்கண்ணி ஆகிய ஊா்களுக்கும் 150 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் சிறப்பு அலுவலா்கள், பரிசோதகா்கள், பணியாளா்கள், பயணிகள் வசதிக்காக பணியமா்த்தப்பட்டு பேருந்து இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT