தேமுதிகவில் புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட தஞ்சாவூா் மாநகர மாவட்ட நிா்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து தேமுதிக சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
தேமுதிக மாநகர மாவட்டச் செயலராக மருத்துவா் ப. இராமநாதன், அவைத் தலைவராக எஸ்.எஸ். அடைக்கலம், பொருளாளராக கரம்பை எஸ். சிவா, துணைச் செயலா்களாக ஆா்.கே.வி. நாகநாதன், பி.எஸ்.பி. வசந்த் பெரியசாமி, ஜெ. ராகவ் பிரகாஷ், ஜி. வள்ளி, தலைமை செயற்குழு உறுப்பினா்களாக வி. நடராஜன், ஆா். பாலாஜி, பொதுக் குழு உறுப்பினா்களாக ஜி. பாலசுப்பிரமணியன், எம்.ஜி. ரெங்கராஜ், மு. பாஸ்கா், ப. செல்வக்குமாா், என்.கே. கலைவாணன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.