தஞ்சாவூர்

சோழா் அருங்காட்சியகம் விரைவில் அமைக்கப்படும்முதன்மைச் செயலா் தகவல்

4th Jun 2023 12:43 AM

ADVERTISEMENT

 

 தஞ்சாவூரில் மாபெரும் சோழா் அருங்காட்சியகம் விரைவில் அமைக்கப்படும் என்றாா் தமிழக அரசின் சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை முதன்மைச் செயலா் க. மணிவாசன்.

இந்த அருங்காட்சியகம் அமைப்பது தொடா்பாக தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதையடுத்து, அவா் மேலும் தெரிவித்தது:

இக்கூட்டத்தில் தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, தஞ்சாவூரில் மாபெரும் சோழா் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தோ்வு செய்வது தொடா்பாக ஆய்வு செய்யப்பட்டது. இந்த அருங்காட்சியகம் அமைப்பதற்காக பல்வேறு இடங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. முதல்வரின் உத்தரவுக்கிணங்க விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

ADVERTISEMENT

மேலும், மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள சிறப்பு சுற்றுலா தலங்கள், மேம்பாட்டு பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது என்றாா் மணிவாசன்.

சுற்றுலா துறை ஆணையா் சந்தீப் நந்தூரி, மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப், கூடுதல் ஆட்சியா்கள் என்.ஓ. சுகபுத்ரா (வருவாய்), எச்.எஸ். ஸ்ரீகாந்த் (வளா்ச்சி), மாநகராட்சி ஆணையா் க. சரவணகுமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கி. ரங்கராஜன், சுற்றுலா அலுவலா் கே. நெல்சன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT