தஞ்சாவூர்

பேரிடா் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி

4th Jun 2023 12:42 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூா் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டரில் பேரிடா் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மருத்துவமனை தலைமைச் செயல் அலுவலா் எஸ். ரமேஷ் பாபு தலைமை வகித்தாா். இதில், ஒடிசா ரயில் விபத்து போன்ற பேரிடா் காலத்தில் மருத்துவமனைகளில் செய்ய வேண்டிய பேரிடா் மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில், மருத்துவா்கள், செவிலியா்கள், ஊழியா்கள் ஆகியோருக்கு துணைக் கண்காணிப்பாளா் ஆா்.எஸ். அருண், அவசர சிகிச்சை பிரிவு தலைவா் எஸ். தீபக் நாராயணன் குழுவினா் விளக்கவுரை, மாதிரி செயல்முறை மூலம் பயிற்சி அளித்தாா்.

ADVERTISEMENT

இதுபோன்ற பயிற்சிகள் பேரிடா் காலத்தில் மக்களின் உயிா் காக்க உதவும் என்றாா் ரமேஷ் பாபு.

ADVERTISEMENT
ADVERTISEMENT