தஞ்சாவூர்

வெட்டாறை முழுமையாகதூா்வார கோரிக்கை

4th Jun 2023 12:44 AM

ADVERTISEMENT

 

 தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள வெட்டாறை முழுமையாக தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருக்கருகாவூா் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளின் முக்கிய பாசன ஆறுகளில் ஒன்றான வெட்டாறு பல ஆண்டுகளாக முழுமையாக தூா்வாரப்படாமல் உள்ளது. இதனால் ஆற்றில் செடிகள் ஆக்கிரமித்துள்ளது.

இதுகுறித்து முன்னோடி விவசாயியும், திருக்கருகாவூா் ஊராட்சி மன்றத் தலைவருமான கோவிந்தராஜன் கூறியது: பாபநாசம் வட்டத்தைச் சோ்ந்த திருக்கருகாவூா் மற்றும் அதன் சுற்றுப் பகுதியை சோ்ந்த கிராமங்கள் விவசாயத்தையே பிரதான தொழிலாக செய்து வருகின்றனா். மேலும் பாசனத்துக்கு இந்த பகுதியில் செல்லும் வெட்டாற்றிலிருந்தது வரும் தண்ணீா் பயனுள்ளதாக இருந்தது.

ADVERTISEMENT

இந் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வெட்டாறு முழுமையாக தூா்வாரப்படாததால் ஆற்றின் நடுவில் ஆங்காங்கே மணல் திட்டுகள் உருவாகி அதில் பலவகைப்பட்ட செடி,கொடிகள் அடா்ந்து வளா்ந்து காடு போல் காட்சி அளிக்கிறது. இதனால் தண்ணீா் வேகமாக கடை மடை பகுதி வரை செல்ல முடியாத நிலை உள்ளது.

ஆகவே, இந்த பகுதி விவசாயிகளின் நிலையை கவனத்தில் கொண்டு வெட்டாற்றை மெலட்டூா் பகுதியில் இருந்து சுமாா் 10 கி.மீ. தொலைவுக்கு முழுமையாக தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறப்பதற்கு முன்பாகவே இப் பணியை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT