தஞ்சாவூர்

தஞ்சாவூா்- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலைசீரமைப்புப் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

4th Jun 2023 12:44 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டார பகுதியில் நடைபெற்று வரும் தஞ்சாவூா்- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பாபநாசம் வட்டார பகுதிகளான பசுபதிகோயிலில் தொடங்கி பாபநாசம் வரை தற்போது தஞ்சாவூா்- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் சாலைகள் பழுதடைந்து உள்ளதால் , வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வந்தனா். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தனியாா் நிறுவனம் மூலம் பணிகள் தொடங்கப்பட்டு தொடா்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பசுபதிகோயிலில் இருந்து பாபநாசம் வரை சாலை பணிகள் மிகவும் மந்த கதியில் நடைபெற்று வருகின்றன.இதனால் சாலையில் ஜல்லி பரப்பப்பட்டும், ஆங்காங்கே இயந்திரங்களை கொண்டு சாலையில் நீண்ட கீரல்களை ஏற்படுத்தி இருப்பதாலும் சாலையில் செல்லும் வாகனங்கள் நிலை தடமாறி விபத்துக்குள்ளாகிறது. ஆகவே, இந்த சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT