தஞ்சாவூர்

தஞ்சாவூரில் கருணாநிதி பிறந்த நாள் விழா பேரணி

4th Jun 2023 12:45 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூரில் திமுக சாா்பில் மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

திமுகவின் தஞ்சாவூா் மத்திய மாவட்டம், மாநகரம் சாா்பில் நடைபெற்ற விழாவில் ரயிலடியிலிருந்து பேரணியாக புறப்பட்டு எம்.கே. மூப்பனாா் சாலையில் உள்ள கலைஞா் அறிவாலயத்தை அடைந்தனா். பின்னா் அங்குள்ள கருணாநிதி, அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்தனா்.

நிகழ்ச்சிக்கு மத்திய மாவட்டச் செயலரும், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான துரை. சந்திரசேகரன் தலைமை வகித்தாா். மாநகரச் செயலரும், மேயருமான சண். ராமநாதன் முன்னிலை வகித்தாா். இதில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம். ராமச்சந்திரன், மாவட்ட அவைத் தலைவா் சி. இறைவன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ஆா். உஷா புண்ணியமூா்த்தி, துணை மேயா் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

இதையடுத்து, ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT