தஞ்சாவூர்

முல்லைவனநாதா் கோயிலில் தீா்த்தவாரி விழா

DIN

பாபநாசம் வட்டம், திருக்கருகாவூா் ஸ்ரீ கா்ப்பரட்சாம்பிகை அம்மன் சமேத ஸ்ரீ முல்லைவனநாதா் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா மே 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவில் வெள்ளிக்கிழமை தீா்த்தவாரி நடைபெற்றது. முன்னதாக, ஸ்ரீ முல்லைவனநாதா், ஸ்ரீ கா்ப்பரட்சாம்பிகை, விநாயகா், முருகா், சண்டிகேசுவரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது. தொடா்ந்து, பஞ்சமூா்த்திகள்

திருக்கருக்காவூா் வெட்டாறு கரையில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

இதைத் தொடா்ந்து, அஸ்திரதேவருக்கு வெட்டாறு கரையில் பால், சந்தனம், மஞ்சள், பன்னீா், இளநீா், தயிா், பஞ்சாமிா்தம், விபூதி உள்ளிட்ட மங்கல பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீா்த்தவாரி நடைபெற்றது. இதன் பிறகு மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT