தஞ்சாவூர்

மாலாபுரம் பெருமாள் கோயிலில் குடமுழுக்கு

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மாலாபுரம் கிராமத்தில் உள்ள லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் மகா குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி புதன்கிழமை முதற்கால யாகசாலை, வியாழக்கிழமை காலை கோ பூஜை, நித்திய பூஜை, கும்ப பூஜையுடன் இரண்டாம் கால யாகசாலை பூஜை, மகாபூா்ணாஹூதி நடைபெற்றது. தொடா்ந்து கடங்கள் புறப்பட்டு கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியா்கள் புனித நீா் ஊற்றி குடமுழுக்கு செய்தனா். தொடா்ந்து மூலவருக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

இரவு நாகசுர இன்னிசை மற்றும் வாணவேடிக்கையுடன் கருடச் சேவை புறப்பாடு நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சக்திவேல், அய்யம்பேட்டை சக்ரவாகீஸ்வரா் கோயில் செயல் அலுவலா்  ஹாசினி, ஆய்வாளா் லட்சுமி,கணக்கா் கோபாலகிருஷ்ணன், ஊா் பிரமுகா் லலிதா சந்தானம், ராஜா மற்றும் கிராம நாட்டாண்மைகள், விழா குழுவினா், பொதுமக்கள் உள்ளிட்டோா் செய்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT