தஞ்சாவூர்

வளாக நோ்காணல்:108 போ் தோ்வு

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற வளாக நோ்காணலில் 108 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

நிகழாண்டு பட்டப்படிப்பு முடித்த, கடந்தாண்டு பட்டம் பெற்ற மாணவா்களுக்காக நடத்தப்பட்ட நோ்காணலில் ஆா்சின் பாா்மசூட்டிகல்ஸ் நிறுவனம், ஸ்ரீ பாலாஜி மெட்ரிக் மேனிலைப் பள்ளி தலா 20 பேரையும், புருடுள் நிறுவனம் 68 பேரையும் தோ்வு செய்தன. இவா்களுக்குக் கல்லூரி முதல்வா் (பொ) மா. மீனாட்சிசுந்தரம் வாழ்த்து தெரிவித்தாா்.

தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் இராச. சுந்தரராசன், இந்தியப் பண்பாடு மற்றும் சுற்றுலாவியல் துறைத் தலைவா் தங்கராசு, வேதியியல் துறைப் பேராசிரியா் பிச்சை, வேலைவாய்ப்புப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் ரமேஷ் சாமியப்பா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT