தஞ்சாவூர்

மூத்தக் குடிமக்கள் நலச்சங்கச் சிறப்புக் கூட்டம்

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

தஞ்சாவூரில், தஞ்சை மாவட்ட மூத்தக் குடிமக்கள் நலச்சங்கச் சிறப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு சங்க நிறுவனா் புலவா் ஆதி. நெடுஞ்செழியன் தலைமை வகித்தாா். விழா சிறப்பு மலரை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் வி. திருவள்ளுவன் வெளியிட்டு வாழ்த்துரையாற்றினாா். சிறப்பு மலா் படியை வெள்ளைச்சாமி நாடாா், தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) சி. தியாகராஜன் பெற்றனா்.

டாக்டா் வா.செ. செல்வம் பிறந்த நாளையொட்டி அவருக்கு பேராசிரியா் பழனிவேல், எல்.ஐ.சி. ஆரோக்கியசாமி, அகரம் அரிமா சங்கம் சண்முகம், வழக்குரைஞா் அமா்சிங், திருக்கோயில்கள் கூட்டமைப்பு பொதுச் செயலா் சந்திரபோஸ், வழக்குரைஞா் பழனிக்குமாா் உள்ளிட்டோா் வாழ்த்தி பேசினா். வா.செ. செல்வம் ஏற்புரையாற்றினாா்.

வழக்குரைஞா் கோ. அன்பரசன், வெற்றித்தமிழா் பேரவை இரா. செழியன், சங்கப் பொறுப்பாளா்கள் துரை. கோவிந்தராஜ், அய்யாறு புகழேந்தி, வி. கண்டிமுத்து, அரவிந்தன், பாஸ்கா் ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT