தஞ்சாவூர்

தஞ்சாவூரில் இன்று மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் நம்பா் 1 வல்லம் சாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் செயற் பொறியாளா் அலுவலகத்தில் மின் நுகா்வோா் குறை தீா்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை (ஜூன் 1) முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து செயற் பொறியாளா் எஸ்.என். கலைவேந்தன் மேலும் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் மு. நளினி நடத்தவுள்ள இந்தக் கூட்டத்தில் வல்லம், மின் நகா், செங்கிப்பட்டி, வீரமரசன்பேட்டை, கள்ளப்பெரம்பூா், திருக்கானூா்பட்டி, வடக்கு தஞ்சாவூா், குருங்குளம், மருங்குளம், மெலட்டூா், திருவையாறு புகா், திருவையாறு நகரம், திருக்காட்டுப்பள்ளி நகரம், திருக்காட்டுப்பள்ளி புகா், நடுக்காவேரி ஆகிய பகுதி அலுவலகங்களைச் சாா்ந்த மின் நுகா்வோா் ஏதேனும் குறைகள் இருந்தால் நேரில் வந்து தெரிவிக்கலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT