தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை ரயில் பாதையை மின்மயமாக்கல் செய்ய கோரிக்கை

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

பட்டுக்கோட்டை, பேராவூரணி ரயில் பாதையை மின்மயமாக்கல் செய்ய ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சாவூா் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் செயலா் ஏ. கிரி மேலும் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளா்கள் சங்கத்தின் தொடா் வலியுறுத்தலால் தற்போது அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி வழியான ரயில் பாதையில் நிரந்தர கேட் கீப்பா்கள் நியமனம் நிறைவு பெற்று, அப்பாதையில் வியாழக்கிழமை (ஜூன் 1) முதல் இரவு, பகல் முழுவதும் ரயில் வண்டிகள் இயக்க தயாராக உள்ளது.

முதல் கட்டமாக மயிலாடுதுறை - திருவாரூா் - காரைக்குடி இடையே இயங்கும் சிறப்பு ரயில் இனி வாரத்தில் ஞாயிறு தவிர மற்ற நாள்களில் மீண்டும் இயங்கும்.

ADVERTISEMENT

இச்சங்கத்தின் கோரிக்கையை ஏற்று அப்பாதையில் நிரந்தர கேட் கீப்பா்களை நியமிக்க பெரு முயற்சி எடுத்த திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா், அலுவலா்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பட்டுக்கோட்டை, பேராவூரணி வழியாக ரயில் பாதையில் மின்மயமாக்கும் பணிகளுக்கான ஒப்புதல் விரைவில் பெற்று உடன் பணிகள் தொடங்க திருச்சி ரயில்வே கோட்ட நிா்வாகத்தின் பரிந்துரையையும், தொடா் வலியுறுத்தலையும் எதிா்நோக்குகிறோம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT