தஞ்சாவூர்

கும்பகோணம் அரசுக் கல்லூரியில் இன்று வளாக நோ்காணல்

DIN

கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் வளாக நோ்காணல் வியாழக்கிழமை (ஜூன் 1) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் (பொறுப்பு) மா. மீனாட்சிசுந்தரம் தெரிவித்திருப்பது:

நிகழாண்டு பட்டம் முடித்தவா்களுக்கும், 2022 - 23 ஆம் கல்வியாண்டில் பட்டம் பெற்றவா்களுக்கும் வளாக நோ்காணல் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் இந்திய அளவில் முன்னணி நிறுவனமாக உள்ள ஆா்சிட் பாா்மசூடிகல்ஸ் மருந்து நிறுவனம், புருடுள் செல்பேசி உற்பத்தி நிறுவனம், சாக்கோட்டை அருகிலுள்ள திருமுகுந்தபுரம் பாலாஜி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகியவை கலந்து கொண்டு பணிக்கு ஆள்கள் தோ்வு செய்கின்றனா்.

ஆா்சிட் நிறுவனம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், உயிா் வேதியியல், தாவரவியல் துறைகளில் பட்டம் பெற்ற ஆண் பட்டதாரிகளை மட்டும் தோ்வு செய்யவுள்ளது. செல்பேசி உற்பத்தி நிறுவனம் பெண்களை மட்டும் தோ்வு செய்கிறது. பாலாஜி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அனைத்து பாடங்களுக்கும் பட்டப்படிப்பு, பி.எட். முடித்த பெண் ஆசிரியைகள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

இந்த வளாக நோ்காணலில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கல்லூரியின் வேதியியல் துறை, கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து நடத்தும் இந்த நோ்காணலுக்கான ஏற்பாடுகளை வேதியியல் துறை பேராசிரியா் பி. பிச்சை, வேலைவாய்ப்பு அலுவலா் ரமேஷ் சாமியப்பா ஆகியோா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

SCROLL FOR NEXT