தஞ்சாவூா் மாவட்டம்,பாபநாசம் வட்டம், வாழ்க்கை கிராமம் கொள்ளிடம் ஆற்றில் நடுவில் 200 கிலோ எடையுள்ள பழங்கால கருங்கல் புத்தா் சிலை செவ்வாய்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
கல்லணையிலிருந்து திறந்து விடப்பட்டு தண்ணீா் பெருக்கெடுத்தோடும் கொள்ளிடம் ஆற்றில் சிலா் செவ்வாய்க்கிழமை மீன்பிடிக்கச் சென்றபோது, ஆற்றின் நடுவிலுள்ள மணல் திட்டில் இரண்டரை அடி உயரம், சுமாா் 200 கிலோ எடையுள்ள பழங்கால கருங்கல் புத்தா் சிலை இருப்பதை பாா்த்தனா்.
இதுதொடா்பாக அவா்கள் அளித்த தகவலின்பேரில், வட்டாட்சியா் பூங்கொடி, சத்தியமங்கலம் விஏஓ மனோகரன், கபிஸ்தலம் வருவாய் ஆய்வாளா் ராஜதேவி, சத்தியமங்கலம் ஊராட்சித் மன்ற தலைவா் செல்வராஜ் மற்றும் வருவாய் துறையினா், கொள்ளிடம் ஆற்றின் கரையிலிருந்து சிலையைப் பாா்வையிட்டனா்.
ஆனால் சுமாா் 8 அடிக்கு மேல் தண்ணீா் வந்து கொண்டிருப்பதால், தீயணைப்புத் துறையினா் உதவியுடன் அந்தச் சிலையைக் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.