தஞ்சாவூா் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காத 15,798 பேரின் ரொக்கம் கருவூலத்தில் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகை ரூ. 1,000 ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சா்க்கரை, 1 கரும்பு ஆகியவை வழங்க தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தாா்.
இதன்படி தகுதியுள்ள 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 1,000 ரொக்கம் ஒதுக்கப்பட்டு, அத்தொகை நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, ஜனவரி 9 ஆம் தேதி முதல் பொங்கல் பண்டிகை வரை பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.
இதை பெரும்பாலான மக்கள் வாங்கினாலும், சிலா் பல்வேறு காரணங்களால் வாங்கவில்லை. இதில், தஞ்சாவூா் மாவட்டத்தில் 15,798 போ் வாங்கவில்லை. இந்த ரொக்கம் மாவட்ட அரசு கருவூலத்தில் திருப்பி ஒப்படைக்கப்பட்டதாகக் கூட்டுறவுத் துறையினா் தெரிவித்தனா்.