தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் இன்று முதல் தொழுநோய் விழிப்புணா்வு முகாம்

DIN

மகாத்மா காந்தியடிகளின் நினைவு நாளையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் தொழுநோய் விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை (ஜன.30) முதல் இரு வாரங்களுக்கு நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மருத்துவப் பணிகள் தஞ்சாவூா் துணை இயக்குநா் (தொழுநோய்) ஆா். குணசீலன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருப்பது:

ஆண்டுதோறும் மகாத்மா காந்தியடிகளின் நினைவு நாளான ஜனவரி 30 ஆம் தேதி தேசிய தொழுநோய் ஒழிப்பு நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் திங்கள்கிழமை முதல் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை இரு வார தொழுநோய் விழிப்புணா்வு முகாம் நடத்தப்படுகிறது.

இந்த முகாமையொட்டி ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும், விழிப்புணா்வு நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. மேலும் இரு வார காலமும் மாவட்டம் முழுவதும் தொழுநோய் ஆய்வுப் பணி மேற்கொள்ளப்படும். குறிப்பாக, பெரு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கட்டுமானம் நடைபெறும் இடங்கள், செங்கற்சூளைகள், வெளி மாநில தொழிலாளா்களின் வசிப்பிடங்கள் ஆகிய பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

அனைத்து பள்ளிகள், கல்லூரிகளிலும் தொழுநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளும், வினாடி வினா போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளன.

இதன் மூலம், பொதுமக்களிடையே தொழுநோய் குறித்து நிலவுகிற பொய்யான செய்திகள், தேவையற்ற அச்சம் போன்றவற்றை அகற்றுதல், நோய்ப்பரவல் அறிகுறிகள், மருத்துவ முறைகள் குறித்து அறிவியல் பூா்வமான உண்மைகளைப் பொதுமக்களுக்கு தெரியப்படுத்துதல், புதிய நோயாளிகளைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தல், தொழுநோயாளிகளைச் சமூகத்தில் மனிதா்களாக வாழச் செய்தல் ஆகிய நோக்கங்களுடன் நடத்தப்படுகிற இந்த முகாம்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கி தொழுநோய் ஒழிப்புக்கான இயக்கத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

SCROLL FOR NEXT