தஞ்சாவூர்

அரசுப் பள்ளிக்கு நிதியுதவி வழங்கியோருக்கு பாராட்டு விழா

DIN

பேராவூரணி ஒன்றியம்,   பொன்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்ட  இடம் வாங்க நிதி வழங்கியோருக்கு ஞாயிற்றுக்கிழமை பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

பொன்காடு அரசு பள்ளியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையில், சுமாா் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இந்தப் பள்ளி தொடங்கப்பட்டு 50 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில்,  மாணவா்கள் அமா்ந்து படிக்க போதிய இடவசதி இல்லாத காரணத்தால் பெற்றோா்கள் தங்களது குழந்தைகளை மாற்றுச் சான்றிதழ் வாங்கி அருகிலுள்ள தனியாா் பள்ளிகளில் சோ்க்கும் நிலை இருந்தது.

இதுகுறித்து பள்ளி வளா்ச்சிக் குழு, பள்ளி மேலாண்மைக் குழு சாா்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட பள்ளிக்கு அருகில் தனியாரிடமிருந்து 6 செண்ட் இடம் வாங்க முடிவு செய்யப்பட்டு, பொதுமக்களிடம் நிதி வசூல் செய்யப்பட்டது.

முதல்கட்டமாக, நிதி வழங்கிய  எஸ். கந்தப்பன், லண்டன்  கனி, மருத்துவா்கள் டி. நீலகண்டன்,  பிரேமலதா, விவேகானந்தன், சரண்யா, ரஞ்சித் மற்றும் மல்லிகை சிதம்பரம், பொறியாளா்கள் ஏ. சி. சி ராஜா, துரையரசன், சரவணன், மாவட்டக்குழு உறுப்பினா் இலக்கியா நெப்போலியன், செந்தில்குமாா், சாகுல் ஹமீது  மற்றும் பள்ளிக்கு இடம் விற்பனை செய்த வீரப்பன் ஆகியோா் பாராட்டப்பட்டு பொன்னாடை அணிவித்து கெளரவிக்கப்பட்டனா். 

விழாவில், பள்ளித் தலைமை ஆசிரியா் லதாஸ்வரி, பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கணேசன், பள்ளி வளா்ச்சிக்குழு தலைவா் பக்கிரிசாமி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் சரண்யா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பள்ளிக்கு இடம் வாங்க மேலும்  நிதி தேவைப்படுவதால்   இடம் வாங்க உதவ விரும்புவோா் பள்ளித் தலைமை ஆசிரியா் லதாஸ்வரியை  94422 33701 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என பள்ளி வளா்ச்சிக் குழுவினா் கேட்டுக் கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT