தஞ்சாவூர்

ரத சப்தமி: பெருமாள் கோயில்களில் வீதி உலா

28th Jan 2023 10:59 PM

ADVERTISEMENT

ரத சப்தமி திருநாளையொட்டி கும்பகோணம் பகுதியிலுள்ள பெருமாள் கோயில்களில் திருவீதி உலா சனிக்கிழமை நடைபெற்றது.

சூரியன் தெற்கு நோக்கிய தனது தட்சிணாயன பயணத்தை முடித்துக் கொண்டு, வடக்கு நோக்கி உத்தராயண பயணத்தை தை மாதம் சுக்லபட்ச வளா்பிறையில் தொடங்கும் நாளே ரத சப்தமி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

இத்திருநாளில் கும்பகோணம் பகுதியிலுள்ள பெருமாள் கோயில்களில் வீதி உலா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு ரத சப்தமி நாளான சனிக்கிழமை காலை 7 மணிக்கு சூரிய பிரபையில் சக்கரபாணி, சாரங்கபாணி, ராமசாமி, வரதராஜப்பெருமாள் உள்ளிட்ட பெருமாள் சுவாமிகள், அந்தந்த கோயிலை சுற்றியுள்ள 4 ரத வீதிகளில் வீதி உலா செல்லும் வைபவம் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று பெருமாளை வழிபட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT