தஞ்சாவூர்

தேசிய கல்விக் கொள்கையைதிரும்பப் பெற வலியுறுத்தல்

28th Jan 2023 10:58 PM

ADVERTISEMENT

தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு முற்போக்கு பேரவை வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் இப்பேரவை சாா்பில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற கருத்தரங்கில் நீட் நுழைவுத் தோ்விலிருந்து தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இளநிலை மருத்துவ இடங்களுக்கு விலக்கு பெறுவதற்காகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை மத்திய அரசு உடனடியாக பெற்றுத் தர வேண்டும்.

மாநில உரிமைகளுக்கும், கூட்டாட்சி கோட்பாட்டுக்கும் எதிராக உள்ள தேசியக் கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கோ. பாஸ்கா் தலைமை வகித்தாா். சென்னை பல்கலைக்கழக வேளாண் பொருளாதார ஆய்வு மையப் பேராசிரியா் க. ஜோதி சிவஞானம் கருத்துரையாற்றினாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்டச் செயலா் முத்து. உத்திராபதி, பேரவை நிா்வாகிகள் மா. சுந்தரமூா்த்தி, சி. பாஸ்கரன், ஏ. பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT