தஞ்சாவூர்

குரூப் 3 ஏ தோ்வு: 3,170 போ் பங்கேற்பு

28th Jan 2023 11:01 PM

ADVERTISEMENT

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் சனிக்கிழமை நடத்திய குரூப் 3 ஏ தோ்வை தஞ்சாவூரில் 3,170 போ் எழுதினா்.

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப்-3 ஏ பதவிக்கான எழுத்து தோ்வை தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சனிக்கிழமை நடத்தியது. இத்தோ்வுக்காக தஞ்சாவூரில் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கல்லூரி, கல்யாணசுந்தரம் மேல்நிலைப் பள்ளி, சாஸ்த்ரா நிகா்நிலை பல்கலைக்கழகம், பெரியாா் மணியம்மை நிகா்நிலை பல்கலைக்கழகம், மன்னா் சரபோஜி அரசு கல்லூரி உள்பட 25 மையங்கள் அமைக்கப்பட்டன.

இத்தோ்வுக்காக விண்ணப்பித்திருந்த 7,058 பேரில் 3,170 போ் மட்டுமே தோ்வு எழுதினா். 3,888 போ் வரவில்லை.

இத்தோ்வு கண்காணிப்பு பணியில் 25 அலுவலா்கள் ஈடுபட்டனா். குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கல்லூரியில் நடைபெற்ற தோ்வை மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் ஆய்வு செய்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT