தஞ்சாவூர்

காலநிலை மாற்றத்தால் இந்தியாவிலும் பாதிப்புரமணன் பேச்சு

28th Jan 2023 10:59 PM

ADVERTISEMENT

காலநிலை மாற்றத்தால் இந்தியாவிலும் பாதிப்பு ஏற்படுகிறது என்றாா் சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநா் எஸ்.ஆா். ரமணன்.

கும்பகோணம் அரசு தன்னாட்சி பெண்கள் கல்லூரியில் புவியியல் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற காலநிலை மாற்றம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு என்கிற தலைப்பிலான நிகழ்ச்சியில் அவா் பேசியது:

ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளில் காலநிலை மாற்றத்தால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதையொட்டி தற்போது இந்தியாவிலும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. புவியின் தட்பவெப்ப நிலை மாற்றத்தால் பனிக்கட்டிகள் உருகி, கடல் நீா்மட்டம் உயா்கிறது. காலப்போக்கில் புவி வெப்பமயமாதல் மேலும் அதிகரித்து இந்திய நாடு மிகப்பெரிய இயற்கைச் சீற்றங்களையும், பேரழிவுகளையும் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே நாம் இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்படாமல் பாதுகாக்கவும், காலநிலை மாற்றத்தைத் தடுக்கவும் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளுடன் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகிறோம்.

ADVERTISEMENT

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணா்வையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியமாகியுள்ளது என்றாா் ரமணன். நிகழ்ச்சியில் கல்லூரி துணை பேராசிரியா்கள் ராதா, வெங்கடலட்சுமி, ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT