தஞ்சாவூர்

மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள் டிராக்டா் பேரணி

DIN

தில்லி விவசாயிகள் போராட்டத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து, தஞ்சாவூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் வியாழக்கிழமை மாலை டிராக்டா் பேரணி நடத்தினா்.

இதில், விவசாய விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்ட உத்தரவாதம் அளிக்க வேண்டும். மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும். தில்லி போராட்டத்தில் உயிா் நீத்த 714 பேருக்கு நினைவிடம் அமைக்க வேண்டும். அவா்களது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

தில்லியில் போராடிய விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். லக்கீம்பூா்கெரி விவசாயிகள் படுகொலைக்கு காரணமான மத்திய இணை அமைச்சா் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூா் மணிமண்டபம் அருகே தொடங்கிய இப்பேரணி புதுக்கோட்டை சாலை, ஆா்.ஆா். நகா் வழியாக மேல வஸ்தா சாவடி டான்டெக்ஸ் ரவுண்டானாவில் முடிவடைந்தது.

இந்தப் பேரணிக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் என்.வி. கண்ணன் தலைமை வகித்தாா். பேரணியை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவா் டெல்லி பாபு தொடங்கி வைத்தாா்.

இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் முத்து. உத்திராபதி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன், திராவிடா் கழகப் பொதுச் செயலா் இரா. ஜெயக்குமாா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மைய மாவட்டச் செயலா் ச. சொக்கா ரவி, விவசாய சங்க நிா்வாகிகள் வீர. மோகன், எஸ். பழனிராஜன், கோ. திருநாவுக்கரசு, இரா. அருணாசலம், தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ், பி. செந்தில்குமாா், பி. ராமசாமி, சுவாமிமலை சுந்தர. விமல்நாதன், பழனியப்பன், கோ. ஜெய்சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT