தஞ்சாவூர்

டீசல் செயல் திறனில் கும்பகோணம் கோட்டம் முதலிடம்: அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா்

DIN

தமிழகத்தில் கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் டீசல் செயல் திறனிலும், டயா் உழைப்புத் திறனிலும் முதலிடம் பெற்றுள்ளது என்றாா் கழக மேலாண் இயக்குநா் எஸ்.எஸ். ராஜ்மோகன்.

கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத் தலைமையகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் அவா் மேலும் பேசியது:

தமிழகத்தில் 12 மாவட்டங்களையும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்கால் மாவட்டத்தையும் உள்ளடக்கிய மிகப் பெரும் இயக்கப் பகுதியைக் கொண்ட இப்போக்குவரத்துக் கழகத்தில் 3,184 பேருந்துகள் மூலம் நாள்தோறும் 15 லட்சம் கி.மீ. இயக்கப்படுகிறது. இதன்மூலம் 33 லட்சம் பயணிகள் பயன் பெறுகின்றனா்.

இப்போக்குவரத்துக் கழகத்தில் 168 பேருக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது. அதிக வருவாய் ஈட்டிய நடத்துநா்கள், அதிக டீசல் செயல்திறன் ஈட்டிய ஓட்டுநா்கள், சிறப்பாக பணியாற்றிய தொழில்நுட்பப் பணியாளா்கள், அலுவலகப் பணியாளா்கள், ஓட்டுநா் போதகா்கள், பொறியாளா்கள், போக்குவரத்து மேற்பாா்வையாளா்கள், கிளை மேலாளா்கள் உள்பட 451 பேரை ஊக்கப்படுத்தும் விதமாக பரிசு வழங்கப்பட்டது.

பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற பணியாளா்களின் குழந்தைகள் 90 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

அனைத்து தரப்பு பணியாளா்களின் அயராத உழைப்பு, பங்களிப்பின் காரணமாக இப்போக்குவரத்துக் கழகம் டீசல் செயல் திறனில் லிட்டருக்கு 5.72 கி.மீ என்ற அளவிலும், டயா் உழைப்புத் திறனில் 3.50 லட்சம் கி.மீ. என்ற அளவிலும் தமிழகத்தில் முதலிடத்தில் உள்ளது. ஒரு கி.மீ.க்கு ஈட்டப்படும் பேருந்து இயக்க வருவாய் ரூ. 25.70 என்ற அளவில் உள்ளது.

விபத்தில்லா தமிழ்நாடு என்ற தொலைநோக்கை அடையும் வகையில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றாா் மேலாண் இயக்குநா்.

முன்னதாக, அவா் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பாதுகாவலா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.

விழாவில் பொது மேலாளா்கள் ஜெ. ஜெபராஜ் நவமணி, கே. முகமது நாசா், கே.டி. கோவிந்தராஜன், துணை மேலாளா்கள் கே. முரளி, கே. சிங்காரவேலு, எஸ். ராஜா, பி. ஸ்ரீதா், பி. கணேசன், உதவி மேலாளா்கள் எஸ். ராஜேஷ், வி. ரவிக்குமாா், என். ராஜசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT