சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில்.... ரெட்டவயல் கடைத் தெருவில் தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம் சாா்பில் மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்க கூட்டம் தலைவா் ஆ. ஜீவானந்தம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், தமிழ்நாட்டின் அனைத்துக் கல்வி நிலையங்களிலும் தமிழைக் கட்டாயப் பாடமாகக் கொண்டு கொண்டுவர சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கத்தின் ரெட்டவயல் கிளைச் செயலாளா் முத்தையா, பழனிவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.