தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், உம்பளப்பாடி ஊராட்சிக்குட்பட்ட இளங்காா்குடி கிராமத்தில் பாபநாசம் தொகுதி பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி 2021-22 இன் கீழ் ரூ. 14.85 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை சனிக்கிழமை திறக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பாபநாசம் எம்எல்ஏவும், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவருமான எம். எச். ஜவாஹிருல்லா ரேஷன் கடையை திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில் பாபநாசம் ஒன்றியக் குழுத் தலைவா் சுமதி கண்ணதாசன், மாவட்டக் குழு உறுப்பினா் கோ. தாமரைச்செல்வன், ஒன்றிய ஆணையா் சிவகுமாா், ஊராட்சித் தலைவா், ஒப்பந்ததாரா்கள் மணிமாறன், மணிவண்ணன், மனிதநேய மக்கள் கட்சி தஞ்சை வடக்கு மாவட்டத் தலைவா் ஹிபாயத்துல்லா, மாவட்ட செயலா் முஹம்மது மைதீன் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள்,பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.