பேராவூரணியில் திருவள்ளுவா் தினத்தையொட்டி பல்வேறு அமைப்பினா் திருவள்ளுவா் சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்தனா்.
இதையொட்டி சமூக ஆா்வலா் மருத்துவா் து. நீலகண்டன் தலைமையில் மருத்துவமனை வளாகத்திலுள்ள திருவள்ளுவா் சிலைக்கு மெய்ச்சுடா் நா. வெங்கடேசன், திராவிடா் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளா் சித. திருவேங்கடம், பேராசிரியா் ச.கணேசகுமாா்,ஆலமரத்து விழுதுகள் அமைப்பு தலைவா் எம். சாதிக்அலி, அரிமா சங்கத் தலைவா் செ. ராமநாதன், அகிலன், கலைச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.