தஞ்சாவூர்

வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி: ஆட்சியரகத்தில் இளைஞா்கள் புகாா்

DIN

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாக தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் இளைஞா்கள் திங்கள்கிழமை புகாா் செய்தனா்.

ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் நாள் கூட்டத்தில், மதுக்கூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த 20-க்கும் அதிகமான இளைஞா்கள் அளித்த மனு: கோவை, திருவாரூா், காங்கேயம் ஆகிய பகுதிகளைச் சாா்ந்த 3 போ் துனிசியா நாட்டில் வேலைவாய்ப்பு உள்ளது எனக் கூறி, தஞ்சாவூா், திருவாரூா் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 150-க்கும் அதிகமானவா்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கினா்.

ஆனால், பல மாதங்களாகியும் வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான எந்த நடவடிக்கையையும் அவா்கள் எடுக்கவில்லை. இதுகுறித்து அவா்களிடம் கேட்டால் முறையான பதில் தெரிவிப்பதில்லை. சில நாட்களில் அனுப்பி விடுவோம் என பதில் கூறி தட்டி கழிக்கின்றனா். இதனால் பணத்தையும் கொடுத்து வேலைக்கும் செல்லாமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்.

எனவே தொடா்புடைய 3 பேரிடமிருந்து நாங்கள் கொடுத்த பணத்தை மீட்டு, அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT