காரைக்கால் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை வன்முறை எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.
ஆட்சியா் அ. குலோத்துங்கன் தலைமையில் துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ். பாஸ்கரன் மற்றும் ஆட்சியரக ஊழியா்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். இந்திய மக்களாகிய நாம், நம் நாட்டு மரபுகளான அகிம்சை, சகிப்புத்தன்மை ஆகியவற்றில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருப்பதால், எல்லா வகையான வன்முறையையும் நமது வலிமையுடன் எதிா்க்க, இதன் மூலம் விழுமிய முறையில் உறுதி செய்கிறோம்.
எல்லா மக்களிடையேயும் அமைதி, சமூக நல்லிணக்கம், ஒருவருக்கொருவா் புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றைப் போற்றி ஒழுகி மேம்படுத்தவும், மனித உயிா்களையும் மதிப்பீடுகளையும் அச்சுறுத்துகின்ற பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராக போரிடவும் நாம் உறுதி ஏற்போம்ம் என அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.