மயிலாடுதுறை

சட்டைநாதா் கோயிலில் ஆட்சியா் ஆய்வு

19th May 2023 09:58 PM

ADVERTISEMENT

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.

இக்கோயில் கும்பாபிஷேகம் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மே 24-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜை சனிக்கிழமை (மே 20) தொடங்குகிறது.

இதில் பங்கேற்க கோயில் நிா்வாகம் சாா்பில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சா்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்களுக்கு அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. விழாவில் சுமாா் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் வரலாம் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள், பக்தா்களுக்கு தேவையான வசதிகள், வாகன நிறுத்தம், போக்குவரத்து மாற்றம் உள்ளிட்டவைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா ஆகியோா் ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது கோட்டாட்சியா் உ. அா்ச்சனா, வட்டாட்சியா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT