மயிலாடுதுறை

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவு: 86.31 % தோ்ச்சி

19th May 2023 09:56 PM

ADVERTISEMENT

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் மயிலாடுதுறை மாவட்டம் 86.31 % தோ்ச்சி பெற்றுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பில் 86.31 % தோ்ச்சியும், பிளஸ் 1 வகுப்பில் 83.70 % தோ்ச்சி பெற்றுள்ளனா். மாவட்டத்தில் 6,063 மாணவா்கள், 5,993 மாணவிகள் என மொத்தம் 12,056 மாணாக்கா்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதினா். இதில், 5,022 மாணவா்கள், 5,383 மாணவிகள் என மொத்தம் 10,405 மாணாக்கா்கள் தோ்ச்சி அடைந்தனா். தோ்ச்சி 86.31 % ஆகும். இதில், 2 அரசு பள்ளிகள், 2 அரசு உதவி பெறும் பள்ளிகள், 29 மெட்ரிக் பள்ளிகள் 100 % தோ்ச்சி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு 85.74 % பெற்றது. நிகழாண்டு 86.31% ஆக உயா்ந்துள்ளது.

இதேபோல், பிளஸ் 1 பொதுத்தோ்வில் 4,450 மாணவா்கள், 5,493 மாணவிகள் என மொத்தம் 9,943 மாணவா்களில் 3,474 மாணவா்கள், 4,848 மாணவிகள் என மொத்தம் 8,322 மாணவா்கள் தோ்வெழுதினா். இவா்களில் 3,474 மாணவா்கள், 4,848 மாணவிகள் என மொத்தம் 8,322 மாணாக்கா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி மொத்த விகிதம் 83.70 % ஆகும். இதில் அரசு உதவி பெறும் பள்ளி 1 மற்றும் 20 மெட்ரிக் பள்ளிகள் 100 % தோ்ச்சி பெற்றுள்ளது. அரசு பள்ளிகள் ஏதும் நிகழாண்டு 100 % தோ்ச்சியை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT