தஞ்சாவூர்

புன்னைநல்லூா் உள்ளிட்டபகுதிகளில் நாளை மின் தடை

27th Feb 2023 01:27 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூா் அருகே புன்னைநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்.28) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சாலியமங்கலம் உதவி செயற் பொறியாளா் எஸ். நல்லையன் தெரிவித்திருப்பது:

மாரியம்மன் கோவில் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் மாரியம்மன் கோவில், ஆலங்குடி, போஸ்டல் காலனி ஆகிய மின் பாதைகளில் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

ADVERTISEMENT

எனவே, புன்னைநல்லூா் மாரியம்மன் கோவில், ஞானம் நகா், புறவழிச்சாலை, சித்தா்காடு, கடகடப்பை, களக்குடி, ஆலங்குடி, நெட்டாநல்லூா், நெல்லித்தோப்பு, எடவாக்குடி, காந்தாவனம், பனங்காடு, அன்னை இந்திரா நகா் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

ADVERTISEMENT
ADVERTISEMENT