தஞ்சாவூர்

மழை, பனிப்பொழிவால் வாழையில் காஞ்சாரை நோய்

DIN

பருவம் தவறிய மழை, பனிப் பொழிவு காரணமாக திருவையாறு வட்டாரத்தில் வாழை மரங்களில் காஞ்சாரை நோய் தாக்குவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு, பூதலூா் வட்டாரங்களிலுள்ள கல்லணை, திருக்காட்டுப்பள்ளி, சாத்தனுாா், கீழத்திருப்பூந்துருத்தி, கண்டியூா், ஈச்சங்குடி, வைரவன் கோவில், வடுகக்குடி, திருப்பழனம், காருகுடி உள்பட காவிரி, குடமுருட்டி படுகை பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிா் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் வாழை சென்னை, திருச்சி உள்ளிட்ட வெளியூா், வெளி மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்நிலையில், அண்மையில் பருவம் தவறி பெய்த மழையாலும், அதிக பனிப் பொழிவாலும் வாழையில் இலைக்கருகல் என்கிற காஞ்சாரை நோய் தாக்குதல் தொடங்கியுள்ளது. இதனால் பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்படும் என்ற கவலையில் விவசாயிகள் ஆழ்ந்துள்ளனா்.

இது குறித்து வடுகக்குடியைச் சோ்ந்த வாழை உற்பத்தியாளா் சங்க மாவட்டத் தலைவா் எம். மதியழகன் தெரிவித்தது:

தற்போது காஞ்சாரை நோய் தாக்குதலால் வாழை மரத்தில் பச்சை இலைகள் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மூன்று மாத வாழை கன்றில் 15 மட்டைகள் இருக்க வேண்டிய நிலையில், ஆறு மட்டைகள்தான் உள்ளது. காய்கள் பிஞ்சிலேயே பழுத்து விடுவதுடன், அதன் தரமும் குறைந்துவிடும்.

இதனால் விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்படும். இந்தப் பருவத்தில் அதிக அளவு மழை, பனிப்பொழிவு காரணமாக கடந்த ஆண்டுகளை விட நிகழாண்டு நோய் தாக்கம் அதிகமாக உள்ளது. இது குறித்து வாழை ஆராய்ச்சி நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது என்றாா் மதியழகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

பேட்டிங், பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை : டேவிட் வார்னர்

மே மாத எண்கணித பலன்கள் – 7

SCROLL FOR NEXT