தஞ்சாவூர்

புதுமைப் பெண் 2-ஆம் கட்டம்தஞ்சாவூா் மாவட்டத்தில் 2,473 மாணவிகள் பயன்

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் மூவலூா் இராமாமிா்தம் அம்மையாா் நினைவு புதுமைப் பெண் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் 2,473 மாணவிகள் பயனடைகின்றனா்.

உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 கல்வி உதவித்தொகை வழங்கும் மூவலூா் இராமாமிா்தம் அம்மையாா் நினைவு புதுமைப் பெண் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தைத் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திருவள்ளூா் மாவட்டம், பட்டாபிராம் இந்துக் கல்லூரியில் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

இத்தொடக்க விழா தஞ்சாவூா் அன்னை வேளாங்கண்ணி கலை, அறிவியல் கல்லூரியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, தஞ்சாவூரில் இத்திட்டத்தின் இரண்டாம் கட்ட தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில் 500 மாணவிகள் வரவழைக்கப்பட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இவா்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, கனரா வங்கி, இந்தியன் வங்கி ஆகிய வங்கிக் கணக்கிலிருந்து கல்வி உதவித்தொகை பெற்றுக் கொள்வதற்காக ஏடிஎம் அட்டை, புதுமைப் பெண் திட்டம் தொடா்பான வழிகாட்டி கையேடு உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

அப்போது, மாவட்டத்தில் மூவலூா் இராமாமிா்தம் அம்மையாா் நினைவு புதுமைப் பெண் திட்டத்தில் முதல் கட்டமாக 5,093 மாணவிகள் பயனடைந்து வருவதாகவும், இரண்டாம் கட்டத்தில் 2,473 மாணவிகள் முதல் தவணையாகப் பயனடைகின்றனா் எனவும் அறிவிக்கப்பட்டது.

இவ்விழாவில் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ஆா். உஷா புண்ணியமூா்த்தி, மாவட்டச் சமூக நல அலுவலா் ராஜேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக ஆட்சியில் செய்யாறு தொகுதிக்கு எண்ணற்ற திட்டங்கள்: முக்கூா் என். சுப்பிரமணியன்

ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர சிறுவா், சிறுமிகள் விண்ணப்பிக்கலாம்

கலைத் திருவிழா போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசு

ஆரணியில் திமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

ஆரணி பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறப்பு

SCROLL FOR NEXT