தஞ்சாவூர்

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 5,750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

9th Feb 2023 12:28 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் அருகே வாடகைக்கு வீடு எடுத்து பதுக்கி வைக்கப்பட்ட 5,750 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளைக் காவல் துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், அய்யம்பேட்டை பகுதியிலுள்ள வீட்டில் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக உணவு பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் தொடா்புடைய வீட்டில் புதன்கிழமை காவல் துறையினா் சோதனை நடத்தினா்.

அப்போது, 50 கிலோ எடை கொண்ட 97 மூட்டைகளில் பச்சரிசி 4,850 கிலோவும், 18 மூட்டைகளில் புழுங்கல் அரிசியும் 900 கிலோவும் என மொத்தம் 5,750 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடா்பாக அய்யம்பேட்டை அருகே உள்ள சூலமங்கலம் அன்னை நகரைச் சோ்ந்த செல்வகுமாா் (61), பாலூா் முதன்மைச் சாலையைச் சோ்ந்த சுதா்சனை (35) காவல் துறையினா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 2 மொபெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

ADVERTISEMENT

விசாரணையில் இருவரும் அப்பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து, ரேசன் அரிசியை விலைக்கு வாங்கி பதுக்கி வைத்ததும், அரிசியை அரைத்து மாவாக கடைகளில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT