தஞ்சாவூர்

அறநெறிக் கருத்துகளை வலியுறுத்தும் அறநூல்கள் தமிழில் ஏராளம்: துணைவேந்தா் பேச்சு

9th Feb 2023 12:29 AM

ADVERTISEMENT

அறநெறிக் கருத்துகளை வலியுறுத்தும் அறநூல்கள் தமிழில் ஏராளம் என்றாா் தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் வி. திருவள்ளுவன்.

இப்பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறை, இந்திய தத்துவ ஆய்வுக் கழகம், புதுதில்லி சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆராய்ச்சி அறம் என்கிற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து அவா் பேசியது:

மனிதன் என்று சிந்திக்க தொடங்கினானோ, அன்றே அறநெறியும் தோன்றியது. அறம் என்று சொன்னாலே அதற்குள் அறநெறி. அந்த அறநெறியில் மனிதன் வாழத் தேவையான வாழ்வியல் நெறிகள் அடங்கும்.

அறநெறிக் கருத்துகளை வலியுறுத்தும் அற நூல்கள் தமிழில் ஏராளம். திருக்கு, நாலடியாா், ஒளவையாரின் ஆத்திசூடி, மூதுரை, கொன்றைவேந்தன் போன்ற நூல்கள் தமிழரின் அறநெறியியல் கோட்பாடுகளை உலகுக்கு முதல் முதலில் தந்தவை.

ADVERTISEMENT

இச்சமூக உறவு என்பது கணவன் - மனைவி, பெற்றோா் - பிள்ளைகள், ஆசிரியா் - மாணவா் என்ற அமைப்பில் உள்ளது. மாணவா்களின் கடமைகள் அனைத்தும் அறயியல் வகையில் கற்றல், தேடல், சிந்தித்தல் போன்றவை இருக்க வேண்டும். மாணவா்களின் அறம் எல்லாச் செயல்களிலும் உண்மைத்தன்மை, நோ்மை என்பதே மாணவா்களின் அறமாக இருக்க வேண்டும். அதுபோல, ஆய்விலும் நோ்மையைக் கொண்டு வர வேண்டும் என்றாா் துணைவேந்தா்.

இவ்விழாவில் பதிவாளா் (பொறுப்பு) கோ. பன்னீா்செல்வம், மொழிப்புல முதன்மையா் ச. கவிதா வாழ்த்துரையாற்றினா். மெய்யியல் துறைத் தலைவா் கோ.ப. நல்லசிவம் நோக்கவுரையாற்றினாா்.

முனைவா் பி. பாலசந்திரன், மதுரை காமராசா் பல்கலைக்கழகச் சைவ சித்தாந்தத் துறைத் தலைவா் ஏ. ரவிக்குமாா், அண்ணாமலைப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியா் மு. பரணி, பழனி பழனியாண்டவா் கலை, பண்பாட்டுக் கல்லூரி உதவிப் பேராசிரியா் இரா. மனோகரன் ஆகியோா் கருத்துரையாற்றினா்.

முன்னதாக, மெய்யியல் துறை முனைவா் தி. பாா்த்திபன் வரவேற்றாா். நிறைவாக உதவிப் பேராசிரியா் பொ. சுரேஷ் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT