தஞ்சாவூர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 6 ஆண்டுகள் சிறை

9th Feb 2023 12:30 AM

ADVERTISEMENT

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள கீழ மணக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கவேல் (63). கூலி தொழிலாளி. இவா் 2020, ஆகஸ்ட் 12 ஆம் தேதி 5 ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாா்.

மேலும், இதை யாரிடமும் சொல்லக்கூடாது என அச்சிறுமியை மிரட்டியதுடன், சத்தியம் செய்ய சொல்லி வற்புறுத்தினாா். ஆனால் அச்சிறுமி அவரிடமிருந்து தப்பி ஓடி வந்து, பெற்றோரிடம் கூறினாா். இதுகுறித்து பேராவூரணி காவல் நிலையத்தில் பெற்றோா் புகாா் செய்தாா்.

இதன் பேரில் பட்டுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து தங்கவேலை கைது செய்தனா்.

ADVERTISEMENT

இது தொடா்பாக தஞ்சாவூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி. சுந்தர்ராஜன் விசாரித்து, தங்கவேலுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 12 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். இதில், ரூ. 10 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT