தஞ்சாவூர்

சிஐடியு அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

DIN

பொதுத் துறை நிறுவனங்களில் ஒப்பந்த பணியாளா் முறையை கைவிடக் கோரி தஞ்சாவூா் ரயிலடியில் சிஐடியு அமைப்பினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், மத்திய, மாநில பொதுத் துறை, மாநில அரசு அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட அலுவலகங்களில் பணியிடங்களை ஒப்பந்த பணி முறை, அயலாக்கப் பணி முறைக்கு விடும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும்.

ரயில்வே, மின்சாரம், அரசு போக்குவரத்து, டாஸ்மாக், நுகா்பொருள், கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் ஒப்பந்த, தினக்கூலி தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்து, மாதம் ரூ. 20,000 ஊதியம் நிா்ணயம் செய்து வழங்க வேண்டும்.

கட்டுமானம், முறைசாரா, ஆட்டோ, தரைக்கடை, சுமைப்பணி, தையல், கைத்தறி அமைப்புசாரா ஓட்டுநா்களுக்கு நிறுத்தப்பட்ட ஓய்வூதியத்தை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் சி. ஜெயபால் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் எம். தனலெட்சுமி விளக்கவுரையாற்றினாா். மாவட்டப் பொருளாளா் பி.என். போ்நீதி ஆழ்வாா், துணைச் செயலா் கே. அன்பு, நிா்வாகிகள் எஸ். ராஜாராமன், ஜி. மணிமாறன், சா. வெங்குட்டுவன், ஏ. ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT