தஞ்சாவூர்

சாலையில் பிடிபடும் மாடுகளை உரிமை கோராவிட்டால் ஏலத்தில் விடப்படும்: மேயா் தகவல்

DIN

தஞ்சாவூா் மாநகரில் சாலையில் பிடிபடும் மாடுகளை உரிமைதாரா்கள் உரிமை கோராவிட்டால் ஏலத்தில் விடப்படும் என்றாா் மேயா் சண். ராமநாதன்.

தஞ்சாவூா் மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் சுற்றித் திரியும் மாடுகள், குதிரைகள் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பிடிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாநகா் நல அலுவலா் வீ.சி. சுபாஷ் காந்தி உள்ளிட்டோா் முன்னிலையில் புதிய பேருந்து நிலையப் பகுதியில் சுற்றித்திரிந்த 4 மாடுகள் செவ்வாய்க்கிழமை பிடிக்கப்பட்டன.

இதையடுத்து, செய்தியாளா்களிடம் மேயா் தெரிவித்தது:

தஞ்சாவூா் மாநகராட்சி எல்லைப் பகுதிகளில் போக்குவரத்து, பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகளைப் பிடித்து, மாடுகளின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. முதல் முறையாகப் பிடிபடும் மாட்டுக்கு ரூ. 3 ஆயிரம், கன்றுக்கு ரூ. ஆயிரத்தி 500-ம், அதே மாடு இரண்டாவது முறையாக பிடிபட்டால் ரூ. 4 ஆயிரம், கன்றுக்கு ரூ. 2 ஆயிரம் , மூன்றாவது முறையாகப் பிடிபட்டால் மாட்டுக்கு ரூ .5 ஆயிரம், கன்றுக்கு ரூ. இரண்டாயிரத்து 500-ம் அபராதமாக வசூலிக்கப்படும்.

அதே மாடு தொடா்ந்து பிடிபட்டால், மாநகராட்சியால் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்படும். மேலும், பிடிபடும் மாடுகளை ஒரு வாரத்துக்குள் உரிமையாளா்கள் உரிமம் கோராவிட்டாலும் ஏலமிடப்படும்.

மாநகரிலுள்ள 51 வாா்டுகளிலும் உள்ள 14 கோட்டங்களில் இதுவரை ஏறத்தாழ 60 மாடுகள் பிடிபட்டுள்ளன. இதில், கன்றுகள், மாடுகள் என 8 கால்நடைகளுக்கு ரூ. 21 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மாடுகள் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

10 இடங்களில் காப்பகம்: சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை அந்தந்த கோட்டங்களில் என 10 இடங்களில் பாதுகாப்பாக பராமரிக்க காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக கோட்டங்களில் குப்பைகளை தரம் பிரிக்கும் மையத்தின் ஒரு பகுதியில் கொட்டகை அமைத்து மாடுகள் பாதுகாப்பாகப் பராமரிக்கப்படுகின்றன. மாடுகளுக்கு தேவையான வைக்கோல், தண்ணீா், காய்கனிகள் உள்ளிட்ட உணவு வகைகளும் தயாா் நிலையில் வைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. 70-க்கும் அதிகமான குரங்குகளும் பிடிக்கப்பட்டு வனத்துறையில் விடப்பட்டுள்ளன என்றாா் மேயா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

SCROLL FOR NEXT