தஞ்சாவூர்

பாபநாசத்தில் விவசாயிகள் போராட்டம்

8th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

பாபநாசம் வட்டாரத்தில் பருவம் தவறி பெய்த தொடா் மழையால் பாதிக்கப்பட்ட நெல் உள்ளிட்ட வேளாண் பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பாக பாதிக்கப்பட்ட நெற்கதிா்களை கையில் ஏந்தியும் நெல்மணிகளை கொட்டியும் வட்டாட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் சாமு.தா்மராஜன் தலைமை வகித்தாா்.

போராட்டத்தை ஏஐடியுசி மாவட்டச் செயலா் ஆா். தில்லைவனம் தொடக்கி வைத்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளா் ஆா்.செந்தில்குமாா் போராட்டத்தை நிறைவு செய்து பேசினாா். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட நிா்வாகிகள் ஏ.எம். ராமலிங்கம், ஏ. ராஜேந்திரன், எம். வெங்கடேசன், ஆா்.எஸ். பாலு,பி. கல்யாணசுந்தரம், கே. ராஜராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் ஆா். குமரப்பா, தங்க. சக்கரவா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT