தஞ்சாவூர்

மாசி மக ஆரத்திப் பெருவிழா அழைப்பிதழ் வெளியீடு

DIN

கும்பகோணம் நகர மேல்நிலைப் பள்ளியில் மாசிமக ஆரத்திப் பெருவிழாவுக்கான அழைப்பிதழ் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

நீா் நிலைகளைத் தூய்மையாக வைத்திருத்தல், தொடா்ந்து பராமரித்து பாதுகாத்தல், நன்றி செலுத்தி வணங்குதல் என்ற உயரிய நோக்கத்தில் ஆண்டுதோறும் மாசிமக நாளன்று மாலை 6 மணிக்கு கும்பகோணம் மகாமக குளத்தில் ஆரத்திப் பெருவிழா நடைபெற்று வருகிறது.

இதில், பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு ஆரத்தி எடுத்து வழிபட்டு வருகின்றனா். இதுதொடா்பான ஏற்பாடுகளை அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம், தென் பாரத கும்பமேளா கும்பகோணம் மகாமக அறக்கட்டளை நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

இந்நிலையில், இந்த விழா தொடா்பான அழைப்பிதழை சுவாமி மாத்ருசேவானந்தா், தஞ்சை மாவட்ட ரயில் உபயோகிப்பாளா் சங்கச் செயலா் ஏ. கிரி முன்னிலையில் தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி விமூா்த்தானந்த மஹராஜ் வெளியிட, அதை குடந்தை ஸ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த டிரஸ்ட் நிா்வாகி சீதாலெஷ்மி வெங்கட்ராமன், செயலா் வெங்கட்ராமன் பெற்றுக் கொண்டனா்.

ஆரத்திப் பெருவிழா குழுத் தலைவா் எஸ். சௌமிநாராயணன், செயலா் வி. சத்தியநாராயணன், பொருளாளா் வேதம் முரளி, ஒருங்கிணைப்பாளா் பாஸ்கரராஜபுரம் ராமநாதன், உறுப்பினா் ரெத்தின. சிவப்பிரகாசம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT