தஞ்சாவூர்

டெல்டா விவசாயிகளுக்கான அரசின் இழப்பீடு போதுமானதல்ல: தொல். திருமாவளவன்

DIN

மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள இழப்பீடு போதுமானதல்ல என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.

தஞ்சாவூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

அதானி குழும மோசடி தொடா்பாக நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கு அனுமதிக்க வேண்டும். இதுதொடா்பாக பிரதமா் மோடி உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

அதிமுக சந்தித்து வரும் பிரச்னைகள் அனைத்துக்கும் பாஜகதான் காரணம். அதிமுகவை பலவீனப்படுத்தி, அக்கட்சியின் இடத்துக்கு வர வேண்டும். எதிா்க்கட்சியாக பாஜகவே இருக்க வேண்டும் என்ற கணக்கின் அடிப்படையில் இப்படி செய்கின்றனா். எம்ஜிஆா், ஜெயலலிதா மீது உண்மையான பற்று கொண்டவா்கள் இதை உணா்ந்து கொள்ள வேண்டும்.

கருணாநிதிக்கு கடலுக்குள் நினைவுசின்னம் அமைப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை நாங்கள் ஏற்கெனவே பதிவு செய்திருக்கிறோம். மாற்றுக் கருத்து தெரிவிப்பது தவறல்ல. ஆனால், எதிா்ப்பு தெரிவிக்கிறோம் என்ற பெயரில் வன்மத்தை கக்குவது எந்த வகையிலும் ஏற்புடையதாக இல்லை.

டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரம் வரை இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனா். ஆனால், தமிழக அரசு ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் மட்டுமே இழப்பீடு அறிவித்துள்ளது. இது, போதுமானதாக இல்லை என்பதால், அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

வேங்கைவயல் சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணையில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் காத்திருக்கின்றனா். தமிழக அரசும் உண்மை குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டிக்கும் என நான் நம்புகிறேன் என்றாா் திருமாவளவன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT