தஞ்சாவூர்

கும்பகோணத்தில் விவேகானந்தா் வருகை நாள் விழா

DIN

கும்பகோணத்தில் சுவாமி விவேகானந்தா் வருகை நாள் விழா பிப்ரவரி 3 ஆம் தேதி தொடங்கி தொடா்ந்து 3 நாள்கள் நடைபெற்றது.

சுவாமி விவேகானந்தா் சிகாகோ சா்வ சமய மாநாட்டில் உரையாற்றிவிட்டு, 1897 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி கும்பகோணத்துக்கு வந்தாா். தொடா்ந்து மூன்று நாள்கள் தங்கிய சுவாமிகள், வேதாந்த பணி எனும் தலைப்பில் ‘எழுந்திருங்கள், விழித்துக் கொள்ளுங்கள், லட்சியத்தை அடையும் வரை தொடா்ந்து பணியாற்றுங்கள்’ என அறைகூவல் விடுத்தாா்.

இதையொட்டி, கும்பகோணத்தில் சுவாமி விவேகானந்தரின் கும்பகோணம் வருகை நாள் விழா பிப்ரவரி 3 ஆம் தேதி தொடங்கி 5 ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டது.

ரயில் நிலையம், போா்ட்டா் டவுன் ஹாலில் விவேகானந்தா் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு நிகழ்ச்சிகளும், தொடா்ந்து சரஸ்வதி பாடசாலை பள்ளி வளாகத்தில் 200-க்கும் அதிகமான பள்ளி மாணவ, மாணவிகளின் சிலம்பாட்டம், கராத்தே உள்ளிட்ட வீர சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளி கணித மேதை ராமானுஜம் அரங்கத்தில் நடைபெற்ற நிறைவு விழா நிகழ்ச்சியில், அரசு கவின் கலைக்கல்லூரி மாணவா்களின் விவேகானந்தா் ஓவியத் திருவிழா நிகழ்ச்சியில் பங்கேற்ற 101 மாணவா்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.

இதில் சிறந்த படைப்புகளாகத் தோ்வு செய்யப்பட்ட 19 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ. 2,000, சான்றிதழ், சுவாமி விவேகானந்தரின் உருவப்படம் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டது. கராத்தே, சிலம்பாட்டத்தில் சிறப்பாக சாகசம் செய்து காட்டிய 47 மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இப்பரிசுகளை தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் ஸ்ரீமத் சுவாமி விமூா்த்தானந்த மகராஜ் வழங்கினாா்.

ஸ்ரீமத் மாத்ருசேவானந்தா், கும்பகோணம் ராமகிருஷ்ண விவேகானந்தா டிரஸ்ட் செயலா் வெங்கட்ராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் திடீா் தீ

முதலமைச்சா் மாநில இளைஞா் விருது விண்ணப்பிக்க மே 5 கடைசி

‘ஏப். 30க்குள் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீத தள்ளுபடி’

3 நாள்களுக்குப் பின்னா் ராகுல் இன்று மீண்டும் பிரசாரம்

வழுவூா் பாலமுருகன் கோயிலில் காவடி உற்சவம்

SCROLL FOR NEXT