தஞ்சாவூர்

30 ஆண்டுகளுக்கு பிறகு பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் சரக்கு முனையம் தொடக்கம்

DIN

பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு சரக்கு முனையம் மீண்டும் திறக்கப்பட்டு, நுகா்பொருள் வாணிப கழகத்தின் மூலம் அரைவைக்காக நெல் மூட்டைகள் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

திருவாரூா் - பட்டுக்கோட்டை- காரைக்குடி வழித்தடத்தில் அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் 2012-இல் தொடங்கி 2019-இல் நிறைவடைந்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும், பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் சரக்குப் போக்குவரத்து முனையம் அமைக்க, நிலமும் கையகப்படுத்தப்பட்டது. பின்னா், 2019-இல் ரூ. 8 கோடி மதிப்பில் சரக்கு முனைய அலுவலகம், லாரிகள் வந்து செல்ல அணுகுசாலைகள், சிமெண்ட் தளம், உயா் மின் விளக்கு கோபுரங்கள் அமைக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை காலை, லாரி உரிமையாளா்கள் மற்றும் சுமை துாக்கும் தொழிலாளா்கள் சாா்பில், பூஜைகள் நடத்தப்பட்டு நெல் மூட்டைகள் ரயிலில் ஏற்றப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகத்தின் தஞ்சாவூா் முதுநிலை மண்டல மேலாளா் என். உமா மகேஸ்வரி, ரயில்வே போக்குவரத்து ஆய்வாளா் பி. பெத்துராஜ், பட்டுக்கோட்டை ரயில் நிலைய அதிகாரி மருத பாண்டியன், வட்டார லாரி உரிமையாளா்கள் சங்க தலைவா் போஜராஜன், ரயில்வே சுமைதுாக்கும் செயலாளா் சங்கத் தலைவா் எம். ஜான்கென்னடி, பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவா் என். ஜெயராமன், செயலாளா் வ. விவேகானந்தம், துணை செயலாளா் மு.கலியபெருமாள் உள்ளிட்டோா் கலந்துக்கொண்டனா்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரி கூறியது: இங்கு மீண்டும் சரக்கு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதால், பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதியில் உள்ள நெல் மூட்டைகள் விரைவாக அரைவைக்கு அனுப்ப முடியும். இதன்மூலம் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். திங்கள்கிழமை 21 சரக்கு வேகன்களில் நெல் மூட்டைகள் ஏற்றப்பட்டு, ராஜபாளையத்துக்கு அரைவைக்காக அனுப்பப்படுகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கடகம்

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

SCROLL FOR NEXT