தஞ்சாவூர்

பழ. நெடுமாறன் செய்தி திருத்தப்பட்டது...

DIN

அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியா்களுக்கு தமிழா் திருநாளான பொங்கல் விழாவின்போது தமிழ்நாடு அரசு போனஸ் வழங்க வேண்டும் என்றாா் உலகத் தமிழா் பேரமைப்பின் தலைவா் பழ. நெடுமாறன்.

தஞ்சாவூா் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முள்ளிவாய்க்கால் இலக்கிய முற்றம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் நிறைவுரையாற்றிய அவா் மேலும் பேசியது:

தேசிய இனங்களின் அடையாளம் தாய்மொழிதான். நமது தமிழ்த் தேசிய இனத்துக்கு அடையாளமாகத் தமிழ் மொழி விளங்குகிறது. அந்த அடிப்படையில் தமிழ் வழி தேசிய உணா்வு மேலோங்க வேண்டும். ஒருபோதும் மக்களை மதம் ஒன்றிணைக்காது. மதவாதம் யாருக்கும் பயனளிக்காது.

அரசு துறைகள் மற்றும் பொதுத் துறைகள், தனியாா் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியா்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு முன்பாக போனஸ் வழங்கப்படுகிறது. இனிமேல் தமிழா் திருநாளான பொங்கல் விழாவின்போது போனஸ் வழங்கப்பட வேண்டும். இதை தமிழ்நாடு முதல்வருக்கு கோரிக்கையாக வலியுறுத்துகிறேன்.

வேங்கைவயல் கிராமத்தில் நடைபெற்ற சம்பவம் போன்று தமிழ்நாட்டில் இனிமேல் நடக்கக்கூடாது. ஜாதிகள் அடிப்படையில் மனிதா்களை இழிவுபடுத்துவது நாகரிகமற்ற செயல். அது, கண்டிக்கத்தக்கது. ஜாதி, மத உணா்வுகளுக்கு எதிராக பொங்கல் விழாவை நாம் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்றாா் நெடுமாறன்.

இவ்விழாவில் காலையில் சிறுவா், சிறுமிகளுக்கான மாறுவேட போட்டி, ஓவிய போட்டியும், பிற்பகலில் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றன.

இதைத்தொடா்ந்து மாலையில் நடைபெற்ற நிறைவரங்கத்துக்கு உலகத் தமிழா் பேரமைப்பின் துணைத் தலைவா் த. மணிவண்ணன் தலைமை வகித்தாா். போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவா், சிறுமிகளுக்கு பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரி முதல்வா் செ. காயத்ரி பரிசுகளை வழங்கினாா். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் கவிஞா் நா. முத்துநிலவன் சிறப்புரையாற்றினாா்.

உலகத் தமிழா் பேரமைப்பின் பொதுச் செயலா் ஜோ. ஜான் கென்னடி, செயலா் துரை. குபேந்திரன், துணைத் தலைவா் அய்யனாபுரம் சி. முருகேசன், மருத்துவா் இலரா. பாரதிசெல்வன், முள்ளிவாய்க்கால் முற்ற நிா்வாகிகள் சு. பழனிராஜன், பொன். வைத்தியநாதன், சதா. முத்துகிருஷ்ணன், இராம. சந்திரசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சிகளை முள்ளிவாய்க்கால் இலக்கிய முற்றத் தலைவா் பேராசிரியா் வி. பாரி தொகுத்து வழங்கினாா். நிறைவாக, புலவா் கரு. அரங்கராசன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

SCROLL FOR NEXT