தஞ்சாவூர்

பிப். 8 முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்கள்

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்கள் வட்டார வாரியாக பிப். 8 முதல் நடைபெறவுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் சனிக்கிழமை தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்று வழங்க வட்டார வாரியாக நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் எலும்பு முறிவு, மன நலன், கண், காது, மூக்கு, தொண்டை மருத்துவா் உள்ளிட்ட அரசு மருத்துவா்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்கின்றனா்.

இந்த மருத்துவச் சான்று அடிப்படையிலேயே மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் வட்டம் திருக்காட்டுப்பள்ளி சிவசாமி ஐயா் உயா்நிலைப் பள்ளியில் பிப். 8 ஆம் தேதியும், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் தேதியும், பட்டுக்கோட்டை நகராட்சி கண்டியன் தெரு நடுநிலைப் பள்ளியில் 11 ஆம் தேதியும், அம்மாபேட்டை ரெஜினா சேலி மேல்நிலைப் பள்ளியில் 14 ஆம் தேதியும், திருவோணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 16 ஆம் தேதியும், மதுக்கூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 17 ஆம் தேதியும், பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 18 ஆம் தேதியும் இந்த முகாம் நடைபெறவுள்ளது.

முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகள் ஆதாா் அட்டை நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் 5, இதற்கு முன்பு சிகிச்சை பெற்ற ஆவணங்கள் ஆகியவற்றுடன் வர வேண்டும்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் இதுவரை அடையாள அட்டை பெறாத அனைத்து மாற்றத்திறனாளிகளும் சிறப்பு முகாமில் பயன்பெறலாம். மேலும், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (யூடிஐடி) பெறாதவா்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, ஆதாா் அட்டை நகல், இரு புகைப்படங்கள் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

SCROLL FOR NEXT