தஞ்சாவூர்

பயிா் பாதிப்புக்கு ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வேண்டும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

DIN

தொடா் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 50,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்.

கும்பகோணத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற பாமக நிா்வாகிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற அவா் தெரிவித்தது:

காவிரி டெல்டா மாவட்டங்களில் அண்மையில் பெய்த தொடா் மழையால் நெற்பயிா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ 10.50 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்ட நிலையில், 3 லட்சம் ஏக்கரில் அறுவடை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 7 லட்சம் ஏக்கரில் 2.10 லட்சம் ஏக்கா் நெற் பயிா்கள் பாதிப்படைந்துள்ளன. இதில் திருவாரூா் மாவட்டத்தில் 90,000 ஏக்கரும், நாகை மாவட்டத்தில் 50,000 ஏக்கரும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 40,000 ஏக்கரும், தஞ்சாவூா் மாவட்டத்தில் 30,000 ஏக்கரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

இதில் இரு விதமான பாதிப்பு விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. ஒன்று, அறுவடை செய்து மூட்டையாக வைத்திருந்த நெற்கதிா்கள் சேதமடைந்துள்ளன. மற்றொன்று வயலில் சாய்ந்துள்ள நெற்பயிா்களை அறுவடை செய்ய முடியாத நிலையில் முளைக்கத் தொடங்கி விட்டன.

எனவே ஏக்கருக்கு ரூ. 50,000 நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நெற்பயிா் காப்பீடு தொகையாக ரூ. 32,500 வழங்க வேண்டும். இதைக் கொடுத்தால்தான் விவசாயிகளைக் காப்பாற்ற முடியும்.

இதேபோல, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து விவசாயிகளிடம் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும். இதற்கு மத்திய அரசிடம் மாநில அரசு வலியுறுத்த வேண்டும்.

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் பாமக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும். அதற்கு முன், 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தோ்தலுக்கு முன் 6 மாதத்தில் வியூகங்கள் அமைப்போம். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பாமகவை பொருத்தவரை தேவையற்றது என்றாா் அன்புமணி ராமதாஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

வண்ணக் கவிதை.. சோனம் கபூர்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

SCROLL FOR NEXT