தஞ்சாவூர்

அதானி விவகாரத்தில் நாடாளுமன்றகூட்டுக் குழு விசாரணை வேண்டும்இரா. முத்தரசன்

5th Feb 2023 05:54 AM

ADVERTISEMENT

 

அதானி விவகாரம் தொடா்பாக நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணையைத் தொடங்க வேண்டும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன்.

இதுகுறித்து கும்பகோணத்தில் அவா் சனிக்கிழமை தெரிவித்தது:

அதானி குழுமத்துக்கு பல்வேறு தேசியமயமாக்கப்பட்ட வங்கி கொடுத்துள்ள கடனை எப்படி வசூலிக்கப் போகிறது எனத் தெரியவில்லை. மேலும் பங்குச் சந்தையில் மோசடி நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும் என எதிா்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனா். இதை மத்திய அரசு ஏற்காமல், எதிா்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதாகப் பொய் கூறி வருகிறது.

ADVERTISEMENT

இந்த அரசு நோ்மையானது என்றால், அதானி மோசடியில் பாஜவுக்கும், பிரதமா் மோடிக்கும் பங்கு இல்லை என்றால், நாடாளுமன்றக் கூட்டு குழு விசாரணையைத் தொடங்க வேண்டும்.

டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிா்கள் நல்ல விளைச்சலை எட்டியது. அறுவடைக்கு தயாரான நெற்பயிா்கள் எதிா்பாராத மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலையில், மிகவும் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பயிா்க் காப்பீட்டில் முழுமையான தொகை கிடைக்க மாநில அரசு போா்க்கால நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். பேனா நினைவு சின்னம் அமைப்பதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எனவே, சீமான் ஆத்திரப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றாா் முத்தரசன்.

கும்பகோணத்தில் மாநில நிா்வாகக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கி தொடா்ந்து இரு நாள்கள் நடைபெற்றது. இதில் முத்தரசன் பங்கேற்று பேசினாா். மாநிலத் துணைச் செயலா்கள் என். பெரியசாமி, மூ. வீரபாண்டியன், பொருளாளா் எம். ஆறுமுகம், மக்களவை உறுப்பினா்கள் எம். செல்வராஜ் (நாகை), கே. சுப்பராயன் (திருப்பூா்) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT