தஞ்சாவூர்

பேராவூரணி வட்டாரத்தில் சோயா விதைப்பு செய்ய அரசு மானியம்

DIN

சோயாபீன்ஸை விதைப்பு செய்திட விவசாயிகள் முன்வர வேண்டும் என பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் எஸ். ராணி கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

சோயா விதைப்பு செய்திட ஒரு ஹெக்டேருக்கு 65 கிலோ விதைகள் 50சத மானியத்தில் வேளாண் விரிவாக்க மையங்களின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

சம்பா நெல் அறுவடை நடைபெற்று வரும் இந்நிலையில் தற்போது பெய்துள்ள மழையை பயன்படுத்தி சோயா விதைகளை வேளாண் விரிவாக்க மையத்திலிருந்து பெற்று உடனடியாக விதைப்பு பணி மேற்கொள்ள விவசாயிகள் அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

சோயா விதைப்பு செய்யும் விவசாயிகளின் விவரங்கள் அனைத்தும் கோயம்புத்தூா் சக்தி சோயா நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அறுவடை முடிவுற்றதும் நிறுவனமே நேரிடையாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்து கொள்ள ஏற்பாடு செய்து தரப்படும்.

சோயா சாகுபடி செய்வதால் மண்ணில் மண்புழுக்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. மண்ணில் தழைச்சத்து நிலைநிறுத்தப்படுவதுடன், காற்றோட்டமும் அதிகரிக்கிறது. மண்ணில் கட்டமைப்பு மேம்படுத்தப்படுகிறது. மண்ணில் நீா்ப்பிடிப்பு தன்மை அதிகரிக்கப்படுகிறது. எனவே, சோயா பயிரிடுவதன் நன்மைகளை விவசாயிகள் உணா்ந்து வேளாண் விரிவாக்க மையங்களிலிருந்து விதைகளை பெற்று உடனடியாக விதைப்பு செய்து அதன் விவரத்தை வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

SCROLL FOR NEXT