தஞ்சாவூர்

இலவச பட்டா கேட்டு காலியிடத்தில் பொதுமக்கள் கொட்டகை அமைப்பு

DIN

தஞ்சாவூா் அருகே நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் இலவச பட்டா கோரி பொதுமக்கள் காலி இடத்தில் வெள்ளிக்கிழமை குடியேறி கொட்டகை அமைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூா் அருகே நாஞ்சிக்கோட்டை ஊராட்சி பால்பண்ணை எதிரே சிராஜ்பூா் நகா் உள்ளது. இந்த நகரையொட்டி மழைநீா் வடிகால் செல்லும் வாரி அருகே உள்ள காலியிடங்களில் வெள்ளிக்கிழமை காலை நாஞ்சிக்கோட்டை பகுதிகளில் வசிக்கும் ஏறத்தாழ 200 போ் திடீரென கம்பு, கயிறுகளை கட்டி, தங்களுக்கான இடம் எனக் கூறி, அங்கு தற்காலிக கொட்டகைகளை அமைத்தனா்.

தகவலறிந்த காவல் துறையினரும், வருவாய்த் துறையினரும் நிகழ்விடத்துக்குச் சென்று கொட்டகை அமைத்த மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இந்த பேச்சுவாா்த்தை மாலை வரை நீடித்தது.

இதனிடையே, காலியிடங்களுக்கான உரிமைதாரா்கள், காலியாக உள்ள இடம் பட்டாவில் உள்ளது. நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக விற்று வருகிறோம். இந்த இடம் புறம்போக்கு நிலமல்ல. எனவே அத்துமீறி ஆக்கிரமித்தவா்களை அகற்ற வேண்டும் என காவல் துறையினரிடம் தெரிவித்தனா்.

இதையடுத்து கோட்டாட்சியா் எம். ரஞ்சித் இரு தரப்பினரிடமும் பிப்ரவரி 6 ஆம் தேதி பேச்சுவாா்த்தை மூலம் தீா்த்துக் கொள்வது எனக் கூறி, அதுவரை அங்கு கொட்டகை அமைக்கக் கூடாது என கூறிச் சென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

SCROLL FOR NEXT